Archive for September 2012

இதயம் வலிக்கிறதடி,,,

என்னடி செய்தேன் உனக்கு..?

செத்துவிடுவாய் என்று தானே
உன் கரத்தை இருக்கமாக பிடித்தேன்..?

ஏன் அத்தனை ஆசைகளையும்
உனக்காகத்  தானே புதைத்துக்கொண்டேன்..?

இதயம் வலிக்கிறதடி உன்னால்,,,

நீ என் காதலி இல்லையா
அல்லது
நீ செய்தது காதலே இல்லையா..?

என் நெஞ்சில் சாய்ந்து
உறங்கிட மட்டுமே
ஆசைப்படுகிறேன் என்று
என்னை நீ தானே ஆட்டுவித்தாய்

விலகிவிடு என்றபோதெல்லாம்
உயிரை விடுவேன் என்றாய்

என் ஒவ்வொரு நொடியையும்
நீ தானே ஆக்கிரமித்தாய்
இப்போது ஏன் இப்படி மாறினாய்,,?

துளி கூட கலப்படம் இல்லாமல்
தனடி என் அன்பை உணர்ந்தாய்

இப்படி அனைத்தையும்
மறந்துவிட்டு சிரிக்கின்றாயோ
டே முட்டாளே என்று...!!

ஆயிரம்  வலிகளை கொடுத்தாலும்
உண்மையான காதல்
விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறதடி,,


Thursday, September 27, 2012
Posted by Unknown

நெடுந்தூர பயணம்


வெளிச்சம் இல்லாத
நெடுந்தூர இருண்ட 
பயணம் என்னுடையது..

என் கண்களுக்கு 
தெரிவதெல்லாம்
தூரத்து ஒளியில் 
புள்ளியாய் இலக்கு

தனிமையில் பயணம்.
காரணம் துணைக்கு
துன்பம் நேரக்கூடாதே
என்பதால் தான்

உன் வீரமும், ஆர்வமும் 
என்னை வல்லமையாக்கும்
என்பதையும் நானறிவேன்

துணைக்கு அழைக்க 
""ஆசைதான்""

நெடுந்தூர பயணத்தை
உன் பாதங்கள் தாங்குமா..?




Saturday, September 22, 2012
Posted by Unknown

என் நிமிடங்களை திருப்பி கொடு...

அன்புள்ள தலைவிக்கு,

ஆட்கொள்ளும்
நிமிடங்களையெல்லாம்
திருப்பி கொடுக்க
விண்ணப்பிக்கிறேன்!!


சிறுசிறுகத்தான்
உன்னை பிடித்து போனது
எப்படியோ என் நிமிடங்களை
செலவழிக்க
வைத்துவிட்டாய் !

நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
மாந்தர்க்கு சிறப்பென்று
என் பாட்டன் சொன்னதை
பகடையாக
வைத்துக் கொண்டாயடி
பெண்ணே!!

தவறவிடும்
நிமிடங்கள் எல்லாம்
என்னை எப்படி கேலி
செய்கின்றது தெரியுமா..?

பிடித்து போனது என்று சொல்லி
என்னை பிடித்துக்கொண்டே போனால்
என் செய்வேன் என் தலைவியே..?




தனிமையுடைத்து..,
என் தவம் கலைத்து..,
தாடி வைத்தவனை
தப்பென்று உணர்த்தி..,
அனைத்தையும் அன்பால்
மாற்றிட செய்து..,
பதிலுக்கு
என் நிமிடங்களை
கொள்ளையிட்டு சென்றால்
ஞாயமாகுமா?





உன்னை தவிர்த்து விடவே
எண்ணுகிறேன்
இப்படியே
ஒவ்வொரு நொடியையும்
என்னுள் விடுகிறேன்..!

புரிந்ததெல்லாம் புரியாமல்
போகட்டும் என்பதை
மட்டும் புத்திக்கு
அடிக்கடி சொல்லி வைக்கிறேன்..!

எப்படியோ என் நிமிடங்களை
உனதாக்கி கொண்டுவிட்டாய்

திரும்ப கேட்கிறேன்

என் நிமிடங்களை
திருப்பி கொடு..!
Monday, September 17, 2012
Posted by Unknown

காடு தரும் ஓய்வு


பொட்டழித்த நெற்றியிலே
பத்திட்ட கந்தையினை
காலையிலே  கண்ணம்மா, 
கல் பட்ட காயத்தினது
செங்குருதி சீர்படுத்த,,,

தட்டில்  போட்ட பழையத
பக்கத்துல வச்சுருக்கேன்
பத்தரைக்கு  மணி அடிக்கும்
ஒரு வாயி  முழுங்கிக்க 

கந்துவட்டி கேட்டிருக்கேன்
கணக்க முடிக்காம கிடையாதாம்,,,

கணக்காளர் வந்ததுமே
கைக்காசு தந்துடுவார்
பஞ்சாயத்து கொட்டறையிலே
மஞ்சமருந்து  வாங்கிக்கலாம்

நேத்து பெஞ்ச அடமழை
கூரையெல்லாம் ஒழுகியதாலே
நனைஞ்ச விறக
நாலு காசா குறைச்சுட்டாவுக

வெட்டிவைச்ச விரகெல்லாம்
விரசாக முடிச்சதுமே
வியாபாரி எடுத்துடுவான்
வீடு வந்து சேர்ந்திடுவேன்

டவுன் பஸ்சுல
பால்ராச பார்த்தேன்
நம்ம பய்யனுக்கு 
ஆண்புள்ள 
பொறந்திருக்காமா

பேரனையும் போய் 
பார்த்துடலாம்
கொஞ்சம் பொருத்துக்க தாயி!!
Sunday, September 9, 2012
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -