Archive for November 2012

ஒரு கோடி தவிப்பு

"ஒவ்வொரு எட்டையும்
நான்கால் பெருக்கி
உடன் மூவாறை கூட்டி
நாஞ்சுழியாய்
ஒன்றனை நீட்டிட 
இருபதை துணைக்கழைத்து
வருவதை கணக்கிட்டேன்!"

பெண்ணே!!

உன்னுடன் 
வாழாத நிமிடங்கள்
ஒவ்வொன்றொன்றும்
இந்த பிரபஞ்சத்தின்
அந்த கடைக்"கோடி"
மூலையின் புள்ளியாய்
தோன்றுதடி!!

( (8 x 4 = 32) + ( 3 x 6 = 18) = 50 000 x 20 = 1,00,00,000)


Tuesday, November 20, 2012
Posted by Unknown

இனிமையான இரவு


உடைத்தெறிய முடியாத
மெளனத்தில்
நீயும் நானும்!!

இராத்திரிகள்
பேசும் கருத்தரங்கில்
பார்வையாளர்
நாம் மட்டுமே தான்!!

வெப்ப பறிமாற்றத்தில்
வெட்கம் பறந்தோடியது
பெண்ணே!!

சீண்டல்களும்,
தீண்டுதல்களும்
இப்படித்தான்
மோட்சம் அடைகின்றனவோ?

ஸ்பரிசங்களின்
இடைவெளியில்
நிமிசங்கள்
பறந்தோடிய வித்தை!!

"வினாடிகள் இவ்வளவு
வேகமானவையா?" என
முற்றுப்புள்ளியில்
கண்டு கொண்டேன்

இனிமை தந்த
என்னவளின் இரவுகளில்,,


Thursday, November 15, 2012
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -